நவ.16 முதல் பள்ளிகள் திறப்பு – 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் அனுமதி!!

0

ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து, ஒடிசாவும் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. வரும் நவ.16ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளி செல்லலாம்.

திரை அரங்கு இல்லை:

கொரோனா காரணமாக, பள்ளி, கல்லூரிக்கு மாணவர்களால் செல்ல முடியவில்லை. பள்ளி மாணவ, மாணவியர்கள் ‘ஆன்லைன்’ வழியாக மட்டும் படித்து வருகின்றனர். ஏழு மாதம் கடந்த நிலையில், ஆந்திர அரசு பள்ளிகளை நவ.2 முதல் திறக்க உள்ளது. இப்பட்டியலில், ஒடிசா மாநிலமும் இணைந்துள்ளது. நவ.16ல், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதைப்போல, “லேப்’ (ஆய்வகம்) உதவியுடன் படிக்கும் முதுகலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள் மட்டும் கல்லூரி, பல்கலைக்கு வரலாம். கோவில், சர்ச், மசூதிகளில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துக் கொள்ளலாம். திரை அரங்கு, நீச்சல் குளம் நவ.16 வரை மூடப்பட்டிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here