மொறுமொறு “தக்காளி நெய் மசாலா சப்பாத்தி” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

0

குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடித்த சப்பாத்தி எப்படி இன்னும் சுவையா செய்யலாம்னு பார்க்கலாம். சப்பாத்தி நீண்ட நேரம் பசியை தாங்கும் மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்பவர் காலை அல்லது மாலை இரண்டு சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம். ஆளு சப்பாத்தி, உருளைக்கிழங்கு சப்பாத்தி போன்றவற்றை நாம் பார்த்திருப்போம். ஆனால், தக்காளியை வைத்து எப்படி சுவையான சப்பாத்தி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 250 கி

தக்காளி – 2

இஞ்சி – 2 துண்டு

பூண்டு – 7 பற்கள்

தயிர் – ஒரு ஸ்பூன்

சீரகம் – 1 டீ ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

நெய், எண்ணெய் – தேவைக்கேற்ப

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் ஒரு மிக்சி ஜாரில் இஞ்சி, பூண்டு, தக்காளி, தக்காளி, சீரகம் சேர்த்து வழுவழுப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர், உப்பு சேர்த்து கலந்து 250கி கோதுமை மாவை சேர்த்து வழக்கமாக சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து மேலே எண்ணெய் தடவி 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

15 நிமிடம் கழித்து தேவையான அளவு உருண்டை பிடித்து கோதுமை மாவில் பிரட்டி முதலில் சிறிய வட்டமாக தேய்க்க வேண்டும். தனியாக ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் நெய், மிளகாய்த்தூள், பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் தேவையான அல்லது உப்பு சேர்த்து கலந்து சப்பாத்தி மாவினுள் வைத்து உருளைக்கிழங்கு சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்க்க வேண்டும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பின் தவாவை நன்றாக சூடுபடுத்தி இடைஇடைய எண்ணெய் ஊற்றி மொறுமொறுப்பாக வேகவைக்க வேண்டும். இதற்கு குருமா எதுவும் தேவையில்லை. தக்காளி மற்றும் மசாலா சப்பாத்தியுடன் சேர்ந்து நெய் வாசனையுடன் சாப்பிடும் பொழுது மிக சுவையாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here