சுவையான மட்டன் கிரேவி – எப்படி செய்றதுன்னு பாப்போம்..!

0
mutton masalaa
mutton masalaa

தேவையான பொருட்கள்

Spicy-Mutton-Curry-Ingredients
Spicy-Mutton-Curry-Ingredients

மட்டன் – 1/2 கிலோ, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், சோம்பு – 2 டீஸ்பூன், வெங்காயம் – 1 , கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, தக்காளி – 2 (நறுக்கியது), தண்ணீர் – 1/2 கப், தயிர் – 1/2 கப், மிளகாய் தூள் – 2 டீஸ்பூன், மல்லித் தூள் – 1 டேபிள், ஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன், மிளகுத் தூள் – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை

முதலில் மட்டனை நன்கு நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஊற வைப்பதற்குமிளகாய் தூள் – 2 டீஸ்பூன், மல்லித் தூள் – 1 டேபிள், ஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன், மிளகுத் தூள் – 1 டீஸ்பூன், உப்புபோன்றவற்றை கழுவிய மட்டனுடன் சேர்த்து பிரட்டி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்

mutton-curry-thumb
mutton-curry-thumb

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் தக்காளி சேர்த்து பிரட்டி விட வேண்டும். தக்காளி நன்கு மென்மையானதும், அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை அதிகரித்து குக்கரை மூடி 7-8 விசில் விட்டு, பின் தீயை குறைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here