சென்னையில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை – 40882 பேருக்கு கொரோன அறிகுறி…!

0
chennai corp commissioner
chennai corp commissioner

கொரோனா தாக்கம் தமிழகத்தில் இன்னும் குறையாமல் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.அதுவும் குறிப்பாக சென்னையில் பெருமளவில் பாதிப்பும் தொற்றும் பரவி சென்னை மக்களை ஊரைவிட்டே வெளியே போகும் அளவுக்கு ஆட்டிக்கொண்டு இருக்கிறது விச கிருமியான கொரோனா.ஆனால் சென்னை மக்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வார்டாக மாற்ற அண்ணா பல்கலைக்கழகத்தை வழங்காவிட்டால் நடவடிக்கை – மாநகராட்சி ஆணையர்..!

வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை

chennai corp commissioner
chennai corp commissioner

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

சென்னையில்  கொரோனா பரிசோதனைக்காக வீடு வீடாக சென்று சோதனை செய்யும் பணி தொடர்ந்து வருகிறது. 11000 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.2020 ஏப்ரல் மதம் முதல பனி நடந்து வருகிறது.சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் 40000க்கு மேற்பட்டோர் கொரோன அறிகுறிகளுடன் கண்டறியப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.கொரோனா தொற்று உள்ளதா என சென்னையில் மட்டும் 2.10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.முகாம்களில் அறிகுறிகள் கண்டறியப்பட்டோருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கில் மாநகராட்சி பணியாளர்களிடம் மறைக்காமல் உண்மையை கூறுங்கள் எனவும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து பல இடங்களில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள்  ஏற்பட்ட உடல் பாதிப்பு குறித்து அரசிடம் தெரிவிக்காமல் உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

chennai corona
chennai corona

அதில் துரதிஷ்டவசமாக சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.மேலும் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகளை அரசிடம் தெரிவித்திருந்தால் 10-15% உயிரிழப்புகளை தடுக்கலாம் என தெரிவித்தார்.மேலும் காய்ச்சல், சளி இருந்தால் களப்பணியாளர்களிடம் மக்கள் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.சென்னையில் நேற்று நடத்தப்பட்ட 483 முகாம்களில் 31,000-க்கும் பயன் பெற்றுள்ளனர். இதில் கொரோனா தொற்று பற்றிய அறிகுறிகளுக்கு மட்டுமின்றி பொதுவாகவே தங்களுடைய உடல் இளைப்புகள் குறித்த பிரச்சனைகளுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஊரடங்கு காலகட்டத்தில் உள்ள முக்கியமாக கொரோனா தொற்று அதிகம் பாதித்த மண்டலங்களில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் கண்காணிப்பு மையத்தில் அமைக்கப்பட்ட தொலைபேசி எங்களை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here