ராஜ்யசபா எம்.பி தேர்தல் – கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாக்களித்தார்..!

0
corona mp
corona mp

நாட்டின் 8 மாநிலங்களில் 19 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் கொரோனா சிகிச்சை பெற்ற காங்கிரசு எம்.எல்.ஏ. பாதுகாப்பு கவச உடையணிந்து வந்து வாக்களித்தார்.

ராஜ்யசபா தேர்தல்

கொரோனா லாக்டவுனால் ராஜ்யசபா தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது. இதனையடுத்து 24 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்

ராஜ்யசபா எம்.பி தேர்தல்
ராஜ்யசபா எம்.பி தேர்தல்

இதில் கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜகவின் இரன்னா கடாடி, அசோக் கஸ்தி ஆகியோரும் அருணாசலப் பிரதேசத்தில் பாஜகவின் நாபம் ரெபியாவும் போட்டியின்றி தேர்வாகிவிட்டனர். இதனால் மீதமுள்ள 19 எம்.பி. இடங்களுக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முதலிய உட்பட ஏராளமான எம்எல்ஏக்கள் தங்களின் வாக்கினை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து இதில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாதுகாப்பு கவச உடையணிந்து வந்து வாக்களித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here