சத்தான & சுவையான “வெள்ளை ஜவ்வரிசி பச்சடி” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

0

விரதம் இருப்பவர்களுக்கு சூப்பரான ஒரு ரெசிபி. விரதம் இருப்பவர்களால் சில சமயம் பசியை தாங்க முடியாது. சர்க்கரை நோய், வயதானவர்கள், மருந்து சாப்பிடுபவர்கள் என சிலருக்கு நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த முடியாது. மயக்கம், தலை சுற்றல் போன்றவை இருக்கும். அப்படி இருப்பவர்கள் ஜவ்வரிசியை இப்படி செய்து சாப்பிட்டால் பசி உணர்வு இருக்காது நமக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 2

மிளகாய் – 2

தக்காளி – 3

வேர்க்கடலை – 50 கி

கேரட், பீன்ஸ் – 1/2 கப்

வெள்ளை ஜவ்வரிசி – ஒரு கப்

மஞ்சள் தூள்

மிளகாய் தூள்

மல்லி, கறிவேப்பிலை

கடுகு, கடலை பருப்பு

உப்பு, எண்ணெய்

செய்முறை:

வெள்ளை ஜவ்வரிசியை கழுவிவிட்டு இரண்டு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். வெங்காயம், மிளகாய், தக்காளி மற்றும் கேரட் பொடியாக நறுக்கி வைக்கவும். வேர்க்கடலையை வறுத்து கொரகொரப்பாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும். மல்லித்தழை மற்றும் கருவேப்பிலையை நறுக்கி வைக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப் பருப்பு போட்டு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் மிளகாயை சேர்க்க வேண்டும். பொண்ணிறமாக வந்தவுடன் கேரட், பீன்ஸ் சேர்த்து கிளற வேண்டும். லேசாக வதங்கியவுடன் தக்காளி, உப்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பின் ஊறவைத்த ஜவ்வரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி சேர்க்க வேண்டும். 5 நிமிடம் அப்படியே அடுப்பை சிம்மில் வைத்து மூட வேண்டும். ஜவ்வரிசியின் நிறம் தண்ணீர் நிறம் போன்று மாறி இருக்கும். அப்படி இருந்தால் தான் ஜவ்வரிசி வெந்ததாக அர்த்தம். இறுதியாக, வேர்க்கடலை பொடி மற்றும் மல்லித்தழை இலைகளை தூவி பரிமாறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here