தேவையான பொருட்கள்
சேமியா , பச்சைமிளகாய் , எண்ணெய், பெரிய வெங்காயம், முட்டை (optional), Fried Rice Mix உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் அறுத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும். அதில் சேமியாவை சேர்த்து வடிகட்டி எடுத்து கொள்ளவும். வடிகட்டி எடுத்த சேமியாவை ஒரு தட்டில் பரப்பி அதனை காயவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
அதன்பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி கொள்ளவும் பின்பு சிறிது உப்பு மற்றும் Fried Rice Mix சேர்த்து வதக்கவும். முட்டை ஓரளவுக்கு வெந்தவுடன் எடுத்து வைத்த சேமியாவை சிறுது சிறிதாக சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின் Fried Rice Mix கொஞ்சம் சேர்க்கவும். பின்பு நன்கு அடிபிடிக்காதவாறு கிளறவும். சேமியா உதிரியாக வரும் வரை கிளறவும். பின்பு கொத்தமல்லி தூவி இறக்கவும் இப்பொழுது Fried சேமியா ரெடி.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |