காரசாரமான “வாத்துக்கறி கிரேவி” ரெசிபி – வாங்க செஞ்சு அசத்தலாம்!!

0

நாம இன்னைக்கி பாக்க போறது ரொம்பவே வித்தியாசமான வாத்துக்கறி கிரேவி எப்படி செய்யலாம்ன்னு தாங்க. கோழி, ஆடு, முட்டை, மீன், கரி போன்ற பல அசைவ உணவுகளை சாப்பிட்டு இருப்போம். ஆனால், வாத்துக்கறி வச்சு எப்படி கிரேவி செய்யலாம்னு பாக்கலாம். வாத்துக்கறி மற்றும் வாத்து முட்டை சளி தொல்லை இருப்பவர்கள் சாப்பிட்டால் விரைவில் குணமடையும். வறட்டு இருமல் உள்ளவர்கள் தினமும் எடுத்து கொண்டால் சரியாகிவிடும்.

தேவையான பொருட்கள்:

வாத்துக்கறி – 1/2 கிலோ

தக்காளி – 2

பெ. வெங்காயம் – 3

ப. மிளகாய் – 4

இஞ்சி, பூண்டு விழுது – 4 டீ ஸ்பூன்

தேங்காய் துருவல் – கால் கப்

சோம்பு – 1 ஸ்பூன்

எண்ணெய் – தேவைக்கேற்ப

மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

பட்டை, கிராம்பு – 2

மிளகு, சீரகம் – ஒரு ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி

செய்முறை:

வாத்தை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாய் இரண்டாக கீறி எடுத்துக் கொள்ளவும். மிளகை அரைத்து பொடியாக்கி வைக்கவும். மிக்சியில் தேங்காய் துருவலுடன், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கிரேவி போல் வரும் வரை நன்றாக கிளறவும். பிறகு கொத்தமல்லி தழை தூவி கிளறிவிட்டு, வாத்துக்கறிய போட்டு பிரட்ட வேண்டும். பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு 2 நிமிடம் வைத்திருக்கவும். அதன் பின் குக்கரை மூடி போட்டு பத்து நிமிடம் கழித்து கிளறி இறக்கவும். சுவையான வாத்துக்கறி கிரேவி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here