தீபாவளி அன்று சரவெடி வெடிக்க கூடாது – தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம்!!

0

தீபாவளி அன்று சரவெடிகள் மற்றும் மருத்துவமனைகள், அமைதியாக இருக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

தீபாவளி பட்டாசு:

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நாளாகும். இந்த ஆண்டு வரும் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி. இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புது ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக கூறி அதனை கட்டுப்படுத்த, அரசு பட்டாசு வெடிக்க ஒரு குறித்த நேரம் அறிவித்திருந்தது. அதன்படி மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 முதல் 7 வரையிலும், இரவு 7 முதல் 8 வரையிலும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

உச்ச நீதிமன்ற அறிவிப்புப்படி, தமிழ்நாடு அரசு கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டு தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணிவரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி அன்றும் கடந்த ஆண்டைப் போலவே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என்று அறிவித்துள்ளது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை மற்றும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும். பின்பு மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி இல்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குடிசை பகுதிகள் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கோரி உள்ளது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here