3 பொருட்களை வைத்து அருமையான பெங்காலி ஸ்வீட் – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
sweet recipes
sweet recipes

ஸ்னாக்ஸ் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் கடைகளில் அதிகம் வாங்கி தருவதை நிறுத்த வேண்டும். முடிந்த வரை வீட்டிலேயே குழந்தைகளுக்கு செய்து தருவது தான் நல்லது. இப்பொழுது வீட்டிலேயே எளிய முறையில் பாலை வைத்து அருமையான ஸ்வீட் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பால் – 1 லிட்டர்

தயிர் – 1 கப்

சர்க்கரை – 3 தேக்கரண்டி

செய்முறை

முதலில் சர்க்கரையை சிறிது தண்ணீர் ஊற்றி அதில் அடுப்பில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும். நிறம் மாறும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு சிறிது பால் சேர்த்து கெட்டிசேராமல் நன்கு கிளறவும். ஓரளவுக்கு வந்ததும் 1 லிட்டர் பால் முழுவதும் அதில் சேர்த்து கிளறவும்.

sweet
sweet

இப்பொழுது பாலை இறக்கி ஆறவைக்கவும். ஒரு பௌலில் கெட்டி தயிரை சேர்த்து நன்கு கிளறவும். 5 நிமிடங்கள் தொடர்ந்து கிளறவும். இப்பொழுது நாம் காய்ச்சி வைத்திருந்த பாலை அதில் சேர்த்து கெட்டி இல்லாமல் கிளற வேண்டும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மேல்பகுதியை துணியால் அல்லது பிளாஸ்டிகால் மூடி அந்த பாத்திரத்தை துணியால் முழுவதுமாக கட்டவும்.

sweet
sweet

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதனுள் இந்த பால் கலந்து வைத்த பாத்திரத்தை வைத்து அதனை மூடி போட்டு மூடி அடுப்பை சிறியதாக வைத்து 2 மணி நேரம் அப்படியே விட்டுவிடவும். இப்பொழுது பெங்காலி ஸ்வீட் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here