பல நோய்களை தீர்க்கும் சுவையான “அகத்திக்கீரை சூப்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

0

அகத்திக்கீரை பித்த சூட்டை குறைக்கும், தோல் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். அதிக நார்சத்து உள்ளது. வயிற்றுப்புண், அல்சர், வயிறு எரிச்சல் ஆகியவற்றை சரி செய்யும். ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும். விரதம் இருப்பவருக்கு வயிற்றில் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் விரதம் முடித்த பிறகு இந்த அகத்திக்கீரை சூப் எடுத்துக்கொள்ளும் போது வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

தேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை – 2 கைப்பிடி அளவு

சின்ன வெங்காயம் – 4

தக்காளி -2

மிளகாய் – 2

இஞ்சி, பூண்டு – 2 துண்டுகள்

மிளகுத்தூள் – தேவைக்கேற்ப

மஞ்சள் தூள் – சிறிதளவு

அரிசிகழுவிய நீர் – 1/2 லிட்டர்

தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்

உப்பு, நெய் அல்லது எண்ணெய்

செய்முறை:

முதலில் அகத்திக்கீரையை நன்றாக கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிகொள்ளவும். இஞ்சி, பூண்டை தோலுரித்து இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி முதலில் நறுக்கி வைத்த கீரை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பின் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பொன்னிறமாக வந்தவுடன் தக்காளி, இஞ்சி பூண்டு, மஞ்சள் தூள் விழுது சேர்த்து கிளற வேண்டும். பின் அரை லிட்டர் அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை விடவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விசில் போனவுடன் குக்கரை திறந்து மிளகு தூள், தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். இதை சாதத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம் அல்லது காலையில் சூப்பாகவும் எடுத்துக் கொள்ளலாம். வாரத்திற்கு இரண்டுமுறை எடுத்துக்கொண்டாலே போதும். மது அருந்தியவர்களுக்கு கொடுக்க கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here