Break-up ஆ?? உங்களுக்கு Break-up ஆ?? அப்போ இத படிங்க.!

0

Relationship breakup என்பது எவராயினும் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு விஷயமே. சிலர் இதனால் தற்கொலை செய்து கொள்கின்றனர். சில மன நோயினால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இதிலிருந்து மீள்வது எப்படி என்று தெரியமாலே அதிகமாக பாதிப்படைகின்றனர்.

மீள்வது எப்படி??

முதலில் இந்த விஷயத்தை யோசித்து கொண்டே இருப்பது மிகவும் ஆபாத்தானதாகும். இது தவறான வழிக்கு வித்திடும். முதலில் நீங்க அவர்களை மறக்க நினைக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும். ஏனெனில் நீங்கள் மறக்க நினைக்கும்போது தான் அது அதிகமாக நினைவுபடுத்தும்.

அடிக்கடி வெளியே போங்க

நீங்கள் உங்கள் காதலருடன் சென்று வந்த இடத்திற்கு அடிக்கடி சென்று அதனை வேறு நினைவாக மாற்ற வேண்டும். Breakup பிறகு தனிமையிலே வாடாமல் உங்களுக்கு என ஒரு குறிக்கோளை நிர்ணயித்து கொள்ளுங்கள். குழந்தைகளுடன் அதிகமாக விளையாடுங்கள்.

நண்பர்களுடன்

உங்கள் நண்பர்களுடன் அடிக்கடி வெளியே சொல்லுங்கள். மேலும் உங்களை வேண்டாம் என்று சொன்னவர் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் போராடுங்கள். இதுவே உங்களை அந்த சோகத்திலிருந்து வெளிக்கொண்டு வரும். உங்கள் பெற்றோரை நினைவில் கொண்டு உங்கள் தவறான எண்ணத்தை மாற்றுங்கள்.

குறிக்கோள்

நீங்கள் அவர்களுடன் இருந்தபோது செய்ய முடியாமல் இருந்த விசயத்தை செய்யுங்கள். இப்பொழுது நீங்கள் ஒரு சுதந்திரமானவர் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை என்று உணருங்கள். அவர்கள் திரும்பி வரப்போவதுமில்லை. என்று அடிக்கடி நினைவு கொள்ளுங்கள். மேலும் அவர்கள் திரும்பி வந்தாலும் அந்த உறவிற்கு மதிப்பு இருக்காது. அது நிலைக்கவும் செய்யாது. இதையெல்லாம் செய்வதன் மூலம் கண்டிப்பாக மீண்டு வரலாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here