ஆதார் – ரேஷன் கார்டு இணைப்புக்கு செப்.30 தான் கடைசி நாள் – ஆன்லைனில் செய்வது எப்படி??

0

பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டினை, ஆதார் உடன் இணைக்க செப்டம்பர் 30ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதற்குள் இதனை செய்யாவிட்டால் நியாய விலைக்கடைகளில் மலிவு விலையில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தற்போது ஆதார் – ரேஷன் கார்டினை ஆன்லைனில் இணைப்பது எப்படி என பார்க்கலாம்.

ஆதார் – ரேஷன் இணைப்பு:

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் ஆதார் எண்ணை வைத்திருக்காத காரணத்தால் மட்டுமே பொதுமக்களின் ரேஷன் கார்டுகள் நீக்கம் அல்லது ரத்து செய்யப்படக்கூடாது என்று தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளதால் இந்த இணைப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Ration shops
Ration shops

ஆன்லைனில் இணைப்பது எப்படி?

  • அதிகாரப்பூர்வ ஆதார் இணையதளத்திற்கு சென்று ‘ஸ்டார்ட் நவ்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்கள் முகவரி விவரங்களை உள்ளிடவும் (மாவட்டம் மற்றும் மாநிலம்)
  • கொடுக்கப்பட்ட ஆப்சன்களில் இருந்து ரேஷன் கார்டை தேர்ந்தெடுக்கவும்.
  • ரேஷன் கார்டு எண், உங்கள் ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
  • பின்னர் ஒரு முறை கடவுச்சொல் (OTP) உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்,
  • OTP ஐ உள்ளிட்டதும் விண்ணப்ப செயல்முறை முடிவடைந்து உங்கள் ஆதார் அட்டை ரேஷன் கார்டுடன் இணைக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here