களத்திர தோஷம் எதனால் ஏற்படுகிறது?? பரிகாரங்கள் இதோ!!

0
களத்திர தோஷம்
களத்திர தோஷம்

களத்திர தோஷம் என்பது திருமண தாமதம், திருமணம் ஆகாத நிலை, மறுமணம், திருமணத்தில் பிரச்சனை போன்றவற்றை உண்டுபண்ணும். எனவே தான் ஒருவரின் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருக்க கூடாது. உங்கள் ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளதா என்பதை எப்படி கண்டறிவது மற்றும் அதற்கான பரிகாரங்களை பார்க்கலாம்.

களத்திர தோஷம்

  • நமது ஜாதகத்தில் களத்திர காரகன் சுக்ரன் ஆவர். இவர் நீசம் அடைய கூடாது. இது களத்திர தோஷத்தை ஏற்படுத்தும். சுக்ரன் கன்னி ராசியில் அமரும் போது நீசம் அடைகிறார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

rasi kattam
rasi kattam
  • மேலும் சனி பகவான் கடகத்தில் அமர்ந்தாலும் அல்லது சந்திரன் மகரம் அல்லது கும்பத்தில் அமர்ந்தாலும் களத்திர தோஷம் ஏற்படும். இதனால் காலம் கடந்த திருமணம், திருமணம் நடக்காத நிலை, அப்படியே திருமணம் நடந்தாலும் சன்னியாசியான வாழ்க்கை போன்றவற்றை ஏற்படுத்த கூடும்.
marriage
  • உங்கள் ஜாதகத்தில் 2 ஆம் இடத்தில பாவ கிரங்கங்கள் (செவ்வாய், ராகு, கேது) போன்றவை அமர்ந்திருந்தாலும் அல்லது அவர்கள் பார்வை பட்டிருந்தாலும் உங்களுக்கு காலத்திரதோஷம் ஏற்படும்.

உங்க ராசிப்படி உங்க மனைவி எப்படி இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா?? அப்போ இத படிங்க!!

  • மேலும் 2 ஆம் இடத்தின் அதிபதி நீசம் பெற்றிருக்க கூடாது. இதனால் குடும்பம் அமைவது பிரச்சனையாகும் அல்லது திருமணத்தில் தாமதமாகலாம்.
  • உங்கள் ராசி கட்டத்தில் சூரியன், புதன், செவ்வாய் இருப்பது பல தாரத்தை உண்டுபண்ணும். மேலும் ஜாதகத்தில் சந்திரன், சுக்ரன், லக்கினம் போன்றவை இருக்கும் ஸ்தானத்தை வைத்தே களத்திர தோஷத்தை ஆராய வேண்டும்.
Navagraham
Navagraham

இந்த தோஷங்களால் தான் திருமண தடை மற்றும் தாமதமான திருமணம் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இது முன் ஜென்மத்தின் அடிப்படையிலேயே அமைவதாகும். முன் ஜென்மத்தில் நாம் செய்த கர்ம வினைப்பயனே ஜாதகத்தில் ஏற்படும் தோஷங்களுக்கு காரணம். இந்த களத்திர தோஷங்கள் நீக்குவதற்கு சுக்ரனை நினைத்து வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற ஆடைகள் உடுத்தி வணங்கி வந்தால் சுக்ரனின் ஆசியை பெறலாம். மேலும் நவகிரகங்களின் நாயகியான மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டு வரலாம். இதனால் நல்ல அனுகூலம் கிட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here