பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி பந்தை இப்படி தான் எதிர்கொள்ளணும்…, சச்சின் டெண்டுல்கர் கொடுத்த ஐடியா!!

0
பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி பந்தை இப்படி தான் எதிர்கொள்ளணும்..., சச்சின் டெண்டுல்கர் கொடுத்த ஐடியா!!
பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி பந்தை இப்படி தான் எதிர்கொள்ளணும்..., சச்சின் டெண்டுல்கர் கொடுத்த ஐடியா!!

பாகிஸ்தானுக்கு பெரிய பலமாக உள்ள ஷாஹீன் அஃப்ரிடியின் வேக தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று இந்திய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சில அறிவுரை வழங்கியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்:

டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில், இந்திய அணி நாளை பாகிஸ்தான் அணியை MCG மைதானத்தில் எதிர்க்க உள்ளது. இந்த போட்டியில், இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடியவராக பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர், காயத்தில் இருந்து அணிக்கு திரும்பியுள்ளார். ஆனாலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், முதல் இரு ஓவரிலேயே 2 விக்கெட்டை வீழ்த்தி அசத்தி இருந்தார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவரது பந்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இந்திய வீரர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

FIFA மகளிர் உலகக் கோப்பை 2023.., மீதமுள்ள 3 இடங்களுக்கு முட்டு சண்டை.., இறுதியில் யாருக்கு அந்த இடம்!!

அதில், ஷாஹீனாது ஒவ்வொரு பாலும் தாக்குதலுக்கு சமமானது. இவரது வேகம் அனைத்தும் ஸ்டெம்பை நோக்கியை கூறியிருக்கும். இதனால், இவரது பந்துகளை பின்னங்காலை உறுதியாக நிறுத்தி, முன்னேறி சென்று அடித்து விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், எதிர் வரும் பந்துகளை அடித்து ஆட முயலுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here