வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இனி ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.., தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!!

0
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இனி ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.., தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!!
மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாதம் இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் இப்போது தேர்தல் ஆணையம் மக்களுக்கு சூப்பரான வசதி ஒன்றை செய்து கொடுத்துள்ளது. அதாவது தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் நிச்சயம் வாக்களிக்க முடியாது. ஆனால் சிலர் வாக்காளர் வாக்காளர் அட்டை இல்லாமல் கடைசி நேரத்தில் எப்படி வாங்குவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். அப்படி உள்ளவர்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் எப்படி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
  • முதலில் வாக்காளர் அட்டையை டவுண்லோடு செய்வதற்கு தேர்தல் ஆணையத்தின் https://voterportal.eci.gov.in or https://old.eci.gov.in/e-epic/ என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • இதில் வாக்காளர் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து ஒரு அக்கவுண்ட் உருவாக்க வேண்டும்.
  • அடுத்ததாக உங்களது போட்டோ, அடையாள அட்டை, விண்ணப்ப ரெபரன்ஸ் எண், மாநிலம் போன்றவற்றை தேர்வு செய்யவும். பின் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும்.
  • அந்த ஓடிபியை உள்ளிட்டு வாக்காளர் அட்டையை டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷனை கிளிக் செய்தால் வாக்காளர் அட்டை டவுன்லோடு ஆகிவிடும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here