டிஜிட்டல் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி?? எளிய வழிமுறைகள் இதோ!!

0

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் பயனர்களுக்கு அவர்களின் அடையாள அட்டையின் டிஜிட்டல் நகலை பதிவிறக்கம் செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது. இதனை UIDAI இன் இணையதளம் (uidai.gov.in) அல்லது mAadhaar மொபைல் செயலியின் மூலம் செய்யலாம். இதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் பார்க்கலாம்.

டிஜிட்டல் ஆதார் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

  • முதலில் ஆதார் இணையதளத்தில் (uidai.gov.in) “ஆதார் பெறும்” பிரிவின் கீழ் “ஆதார் பதிவிறக்கம்” என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அடுத்து, மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். அவை ஆதார் எண் (யுஐடி), பதிவு ஐடி (ஈஐடி), மெய்நிகர் ஐடி (விஐடி). இதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

  • தேவையான விவரங்களை பூர்த்தி செய்த பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதனை உள்ளிட வேண்டும்.
  • இதன் பின்னர், “சரிபார்க்கவும் பதிவிறக்கவும்” ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

  • இந்த செயல்முறை வெற்றிகரமாக முடிந்ததும், ஆதார் அட்டையின் டிஜிட்டல் நகல் பதிவிறக்கம் செய்யப்படும். மேலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட PDF பாஸ்வேர்ட் உடன் பாதுகாக்கப்பட்டு இருக்கும். பயனருக்கு வழங்கப்பட்ட பாஸ்வேர்ட் ஐ உள்ளிட்ட பின்னரே ஆதார் எண்ணை காண முடியும்.
  • இந்த பாஸ்வேர்ட் பயனரின் பெயரின் முதல் நான்கு எழுத்துக்ள் மற்றும் பிறந்த ஆண்டு YYYY ஆகியவற்றை கொண்டது என UIDAI தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here