முடி உதிர்வு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த ஹேர்மாஸ்க் – இதோ உங்களுக்காக!!

0

இன்றைக்கு பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இருக்கும் பெரும்பாலான பிரச்சனைகளில் ஓன்று தலைமுடி உதிர்வு பிரச்சனை. தலைமுடி உதிர்வதற்கு காரணம் நம் உடலில் அதிக சூடு இருப்பது தான். முந்தைய காலங்களில் அதிகாலையில் எழுந்து குளிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இப்போது சூரியன் உதயத்திற்கு பிறகு எழுவது, உச்சி வெயிலில் குளிப்பது இதனால் உடலில் சூடு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காகவும், நீண்ட கூந்தலை பெறுவதற்காவும் இயற்கையான வழிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

கறிவேப்பிலை:

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கறிவேப்பிலையில் அதிகம் இரும்புச்சத்து உள்ளது. கூந்தல் உதிர்வு பிரச்சனை என்றாலே நம் பயன்பாட்டில் கறிவேப்பிலையின் பங்கு அதிகமாக இருக்கும் வேண்டும் என்பது நமக்கு தெரியும். இளநரை, முடி வறட்சி போன்ற முடி சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்கள் கருவேப்பிலையை எண்ணையில் காய்ச்சி பயன்படுத்தும்போது சில நாட்களிலேயே முடி கருப்பாக, நீளமாக வளரும்.

ஆவாரம் பூ இலை:

ஆவாரம் பூ, பட்டை, வேர் என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் உள்ளவை. சரும வறட்சியை போக்கும் தன்மை கொண்டது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் 48 நாட்கள் ஆவாரம் பூ தேநீர் குடித்தால் சர்க்கரை நோய் வராது. கூந்தல் வறட்சியாக இருப்பவர்கள் ஆவாரம் பூவை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி வறட்சியாக இருக்காது.

செம்பருத்தி:

செம்பருத்தி பூ மற்றும் இலை இரண்டுமே முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவக் கூடியவை. செம்பருத்தி இலையை அரைத்து தேய்த்தது குளித்தால் முடி கருப்பாகவும், நீளமாகவும் வளரும். முடி பார்ப்பதற்கு பட்டுப்போல் அழகாக இருக்கும். செம்பருத்தி இலையை மட்டும் எடுத்து தண்ணீரில் ஊறவைத்து நன்றாக பிசையும்போது சிறந்த ஹேர் கண்டிஷனர் கிடைக்கும்.

கரிசலாங்கண்ணி:

வெள்ளை, மஞ்சள் இரண்டு வகையான கரிசலாங்கண்ணி உள்ளது. வயல் பகுதிகளில் அதிகமாக இருக்கும். மழைக்காலங்களில் கிடைக்கும். இவை முடி வளர்ச்சியை தூண்டக்கூடியவை. இவற்றின் இலைகளை அரைத்து காயவைத்து தலைக்கு தேய்க்கும் எண்ணையில் சேர்த்து காய்ச்சி பயன்படுத்தினால் முடி நன்றாக வளரும்.

மருதாணி:

மருதாணி என்பது நம் அனைவரும் கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி இருப்போம். ஆனால், இவை கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியவை. உடலில் உள்ள சூட்டை தணிக்க வல்லது. கூந்தலுக்கு இயற்கையான நிறத்தை கருமை நிறத்தை கொடுக்க பயன்படுகிறது.

ஹேர்பேக் பயன்படுத்தும் முறை:

கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, செம்பருத்தி இலை – 10, ஆவாரம் பூ – 15, கரிசலாங்கண்ணி இலை – ஒரு கைப்பிடி, மருதாணி இலை – கைப்பிடியளவு. அனைத்து இலைகளையும் எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். தலையை எண்ணெய் பசை இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொண்டு இந்த கலவையுடன் எலுமிச்சைசாறு கலந்து தலையின் வேர்க்கால்கள் மற்றும் முடிகளில் நன்றாக தேய்க்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

40 நிமிடம் கழித்து ஷாம்பூ எதுவும் பயன்படுத்தாமல் கூந்தலை அலச வேண்டும். எண்ணையில் காய்ச்சி பயன்படுத்துவதை விட இவ்வாறு பயன்படுத்தும்போது அதன் சத்துக்கள் நேரடியாக முடிக்கு கிடைக்கும். பலன்கள் விரைவாக தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here