SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – WhatsApp சேவையை தொடருவது எப்படி?

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - WhatsApp சேவையை தொடருவது எப்படி?
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - WhatsApp சேவையை தொடருவது எப்படி?
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – WhatsApp சேவையை தொடருவது எப்படி?

SBI வங்கி தற்போது தான் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலமான சேவைகளை வழங்கி இருக்கிறது. இந்நிலையில், SBI வங்கி வாடிக்கையாளர்கள் WhatsApp சேவையை தொடருவது எப்படி என்பது குறித்தான முழு அறிவிப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி:

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை கடன் வழங்கும் நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது கூடுதல் சலுகைகளை வழங்கி வருகின்றன. மேலும், SBI வங்கி கடந்த வாரம் வாட்ஸ்அப் மூலமான பரிவர்த்தன சேவைகளையும் அறிமுகம் செய்தது. அதாவது, வாட்ஸ்அப் வங்கி சேவைகள் மூலமாக மினி ஸ்டேட்மென்ட் மற்றும் அக்கவுண்ட் பேலன்ஸ் ஆகியவற்றை உடனுக்குடன் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும், எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் பேங்கிங் சேவைகளை தொடர முதலில் வங்கி அக்கவுண்ட்டுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும். அதாவது, முதலில், SBI வங்கியுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7208933148 என்கிற எண்ணிற்கு WAREG என டைப் செய்து SMS அனுப்ப வேண்டும். பின்னர், 90226 90226 என்கிற எண்ணில் இருந்து உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு எஸ்பிஐயின் SMS வரும்.

பின்னர், அந்த எண்ணிற்கு ‘Hi SBI’ என SMS அனுப்பவும். Hi என அனுப்பியதும் “அன்புள்ள வாடிக்கையாளரே, நீங்கள் SBI வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளில் வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளீர்கள்” என்கிற செய்தி அனுப்பப்படும். இதற்கு பிறகு நீங்கள் எந்த சேவையை செய்ய விரும்புகிறீர்களோ அந்த எண்ணை தேர்வு செய்யவும். அதாவது, கடைசி ஐந்து பரிவர்த்தனைகளை பெற விரும்பினால் கணக்கு இருப்பு அல்லது சிறு அறிக்கை ஆகியவற்றை தேர்வு செய்யலாம். அதே போல எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவையில் இருந்து பதிவு நீக்கம் செய்ய விரும்பினால் விருப்பம் 3 ஐ தேர்வு செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here