கடந்த மாதம் நடந்த அதிமுக பொதுக்கூட்டம் செல்லாது – நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

0
கடந்த மாதம் நடந்த அதிமுக பொதுக்கூட்டம் செல்லாது - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

கடந்த மாதம் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

பொதுக்கூட்டம் செல்லாது:

கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சராகிய எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வத்துக்கு இடையே உட்கட்சி மோதல் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் சென்னையில் ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் மற்றும் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டது சட்டப்படி செல்லாது என்றும் அறிவிக்கக்கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது நீதிபதி கூறியதாவது, கடந்த ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்றும் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது சட்டப்படி செல்லாது என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்ட போது, இந்த தீர்ப்பு இறுதியானது இல்லை. இந்த தீர்ப்பின் முழு விவரங்கள் கிடைத்ததும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து மேல் முறையீடு குறித்து தீர்மானிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here