கோர விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு – பதைபதைக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

0

ஹாலிவுட் திரையுலகில், முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் கார் விபத்தில் சிக்கிய சம்பவம், மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 விபத்தில் சிக்கிய நடிகர் :

ஹாலிவுட் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர். ஹாலிவுட் திரையுலகின் ஜாம்பவானாக கருதப்படும் இவர், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் தன்னுடைய காரில் பிரன்ட்வுட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள் தொடர்ந்து அடுத்தடுத்து மோதிக் கொண்டன.

இதனால் அவரது கார், அங்கிருந்த ஒரு சிறிய காரின் மீது மோதி நின்றது. இந்த பயங்கர விபத்தில்  அதிர்ஷ்டவசமாக, நடிகர் அர்னால்டுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த கோர விபத்தில், ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. நடிகர் அர்னால்டுக்கு  ஏற்பட்ட இந்த துயர சம்பவம், அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here