ஹாக்கி உலக கோப்பை 2023: சொந்த மண்ணில் வெற்றியுடன் துவங்க காத்திருக்கும் இந்தியா!!

0
ஹாக்கி உலக கோப்பை 2023: சொந்த மண்ணில் வெற்றியுடன் துவங்க காத்திருக்கும் இந்தியா!!
ஹாக்கி உலக கோப்பை 2023: சொந்த மண்ணில் வெற்றியுடன் துவங்க காத்திருக்கும் இந்தியா!!

ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரானது, ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள கலிங்கா மற்றும் பிர்சா முண்டா மைதானங்களில் நடைபெற இருக்கிறது. இதில், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நியூசிலாந்து, அர்ஜென்டினா உள்ளிட்ட 16 அணிகள் பங்கு பெற உள்ளன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த 16 அணிகள் 4 குழுகளின் கீழ் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதலில் லீக் சுற்றுகள் போல் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை மோத உள்ளன. இதன் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதனை தொடர்ந்து, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் 27 மற்றும் 29ம் தேதி நடைபெற இருக்கிறது.

2023 ல் முதல் சதத்தை பதிவு செய்த நியூசிலாந்து வீரர்…, குறைந்த இன்னிங்ஸில் இவ்வளவு ரன்களா??

இந்த தொடரில் இந்திய அணி, குழு Dயில் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் அணிகளுடன் இணைத்துள்ளது. இதில் இந்திய அணி முதலில், 13ம் தேதி ஸ்பெயின் அணிக்கு எதிராக மோத உள்ளது. இந்த தொடரில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. உலக கோப்பை குறித்து, இந்திய அணியின் முன்கள வீரர் சுக்ஜீத் சிங், ரசிகர்கள் பார்வையில் ஸ்பெயினுக்கு எதிராக வெற்றியுடன் தொடங்குவோம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here