2023 ல் முதல் சதத்தை பதிவு செய்த நியூசிலாந்து வீரர்…, குறைந்த இன்னிங்ஸில் இவ்வளவு ரன்களா??

0
2023 ல் முதல் சதத்தை பதிவு செய்த நியூசிலாந்து வீரர்..., குறைந்த இன்னிங்ஸில் இவ்வளவு ரன்களா??
2023 ல் முதல் சதத்தை பதிவு செய்த நியூசிலாந்து வீரர்..., குறைந்த இன்னிங்ஸில் இவ்வளவு ரன்களா??

பாகிஸ்தான் அணிக்கு எதிராக, நியூசிலாந்து வீரர் 2023 ஆம் ஆண்டின் முதல் சதத்தை அடித்து அசத்தியத்துடன் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

டெவோன் கான்வே:

நியூசிலாந்து அணியானது, பாகிஸ்தானுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டது. இதன் படி, நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடிந்தது. இதையடுத்து, 2 வது டெஸ்ட் போட்டி இன்று முதல் தொடங்கியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில், டாம் லாதம் 71, கேன் வில்லியம்சன் 36 மற்றும் டேரில் மிட்செல் 3 ரன்களில் வெளியேறினர். டெவோன் கான்வே மட்டும் நிலைத்து நின்று 16 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 122 ரன்கள் அடித்து 2023 ன் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

பிசிசிஐ தேர்வு செய்த 20 வீரர்கள்…, எதிர்பார்க்கப்படும் பட்டியல் இவர்களுக்கு மட்டும் தான் இடமா??

கடந்த 2021ம் ஆண்டு முதல் சர்வதேச டெஸ்டில் விளையாடி வரும் டெவோன் கான்வே இதுவரை 12 போட்டிகளில் 21 இன்னிங்ஸில் விளையாடி உள்ளார். இந்த இன்னிங்ஸில் இவர், ஒரு இரட்டை சதம், 4 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் என 1150 ரன்களை குவித்துள்ளார். மிக குறைந்த இன்னிங்ஸில் அதிக ரன்களை அடித்து அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here