சூப்பர் ஸ்டார் குறித்து ஆதரவாக பேசிய நடிகை கங்கனா ரனாவத் – இருக்கிற பிரச்சனை போதாதுன்னு.. நீங்க வேற!!

0

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் குறித்து பேசிய கருத்து சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வைரல் கருத்து:

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் இயக்குனர் விஜய் இயக்கத்தில், தலைவி என்ற படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசும் இவர், அண்மையில் விடுதலைப் போராளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கினார். கடந்த சில தினங்களாக தென்னிந்திய நடிகர்களுக்கும், தென்னிந்திய படங்களுக்கும் பாலிவுட் திரையுலகில் மரியாதை இல்லை என்ற கருத்துக்கள் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.  இந்நிலையில், தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் குறித்து முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் இந்திய சினிமாவில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர்கள். அவர்கள் சேவையும், ஆர்வமும் இங்கே ஈடு இணையற்றது. பாலிவுட் சினிமா தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களை சிதைக்கும் செயலை அனுமதிக்கக் கூடாது என பேசியுள்ளார். சமீபத்தில், பல தென்னிந்திய நடிகர்களின் படங்கள் பாலிவுட்டில் வெற்றி அடைந்ததால் பாலிவுட் நடிகர்களை வெறுப்பேற்ற நடிகை கங்கனா இவ்வாறு கருத்து தெரிவித்து இருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here