100 நாள் வேலைத்திட்டத்தை நாடும் பட்டதாரிகள் – உ.பி.,யில் கடும் வேலையில்லா திண்டாட்டம்..!

0
Mahatma Gandhi Rural Work
Mahatma Gandhi Rural Work

அதிக அளவு இளைஞர்களை கொண்ட நம் நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக உத்தரபிரதேச பட்டதாரிகள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை பார்க்க விண்ணப்பித்து இருந்தது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

புலம் பெயர் தொழிலாளர்கள் திண்டாட்டம்

இளைஞர்களை அதிகமாக கொண்டு உள்ள நம் நாட்டில் பல இடங்களில் வெள்ளி பார்க்கின்றனர். அதிலும் குறிப்பாக கிராமத்தில் படித்து பட்டதாரிகள் ஆன இளைஞர்கள் பலர் உள்ளனர். இதனிடையே கொரோனாவில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் பல இளைஞர்கள் வேலை இழந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர்.

பட்டதாரிகளின் நிலை:

இதனிடையில் ரோஷன் குமார் என்பவர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை தேடி வருகிறார். ரோஷன் எம்.ஏ பட்டதாரி ஆவார். சுமார் 30லட்சம் பேர் புலம்பெயர்ந்து உள்ளனர், இதனால் அங்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகமாக உள்ளது. உள்ளுர்த்தொழிலாளர்களுக்கு இணையாக புலம் பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு தேடி வருகின்றனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

.

“நான் முன்னர் வேலைக்கு சென்று சீரான வருமானத்தில் இருந்தேன். ஆனால், லாக்டவுன் அறிவிக்கப்பட்டவுடன் வேலை பறிபோனது. வேறு வழியின்றி சொந்த கிராமங்களுக்கு புலம் பெயர நேர்ந்தது.“ என குமார் கூறியுள்ளார்.

100 நாட்கள் வேலைவாய்ப்பில் கீழ் நீர் நிலைகளை சீரமைப்பது, சாலைகளை செப்பனிடுவது போன்ற உடல் சார்ந்த உழைப்பிற்கு தயாராக உள்ளனர். இது வேலையில்லா திண்டாட்டத்தை பறைசாற்றும் விதமாக உள்ளது.

“எனக்கு பிபிஏ பட்டம் உள்ளது, ஆனால் எனக்கு எந்த நல்ல வேலையும் கிடைக்கவில்லை. இறுதியாக, நான் ஒரு மாதத்திற்கு ரூ .6,000-7,000 மதிப்புள்ள ஒரு வேலையைச் செய்தேன், பின்னர் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் அந்த வேலையும் போய்விட்டது. தற்போது நான் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வருகிறேன்.“ என பிபிஏ பட்டம் பெற்ற சதேந்திர குமார் கூறுகிறார்.

நாடு முழுவதில் உள்ள மக்களில் 14 கோடி பேர் பதிவு செய்து உள்ளனர். “இந்த வேலையை நாடும் அனைவரும் வேலை கிடைக்க வேண்டும். அதேபோல அரசு அதற்கான நிதியினை ஒதுக்க வேண்டும்.“ என பொருளாதார வல்லுநரான ரீதிகா கெரா சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டம்

ஏப்ரல் 1 இல் இருந்து சுமார் 35 லட்சம் பேர் வேளைக்கு பதிவு செய்து உள்ளனர் என்பது முன்பு ஏதும் இல்லாத அளவு ஆகும். லாக்டவுன் காரணமாக வேலையிழந்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர் என ஜுனைத்பூரில் கிராமத் தலைவர் வீரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here