BSNL ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ. 40,000 ஊதியம் வழங்குக – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

0
chennai high court
chennai high court

தமிழகத்தில் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் பணியாளருக்கு 2019 ஆம் ஆண்டிற்கான ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இதனை கண்டித்து அனைத்து பணியாளர்களும் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

வழக்கு:

தமிழகத்தில் மொத்தம் 3,528 பேர் பி.எஸ்.என்.எல் அலுவலங்களில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகின்றன. அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான ஊதியம் சரியாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இதனை கண்டித்து தமிழ்நாடு ஒப்பந்த பணியாளர் சங்கம் மற்றும் மாநில ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

bsnl
bsnl

இந்த வழக்கு தற்போது நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெறுகிறது. நடந்த விசாரணையின் போது ஒப்பந்த நிறுவனங்களுக்காக கொடுத்த 60 கோடியில் 25 சதவீதமான 15 கோடி இந்த வழக்குக்கு செலவிட்டதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வழக்கு ஒத்திவைப்பு

பின்பு நீதிபதி சுரேஷ்குமார் 15 கோடி ரூபாயில், நிலுவையில் இருந்த ஊதியத்தை 3,528 ஒப்பந்த ஊழியராக வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளருக்கு தலா ரூ.40,000 வழங்க வேண்டும் என்று தொழிலாளர் ஆணையருக்கு உத்தரவு இட்டார். ரூ.40,000 தொகையை விட நிலுவை ஊதியம் குறைவாக இருந்தால் அதை மட்டும் வழங்கினால் போதும் என்றும் தீர்ப்பளித்தார். பண்டிகை காலம் நெருங்குவதைக் கருத்தில் கொண்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த விவரம் குறித்து நன்கு அறிந்த 3 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

high court
high court

அக்குழுவினர் ஒப்பந்த ஊழியரின் முழுவிவரங்களையும் அறிய வேண்டும். அறிந்த பின் வரும் நவ.10,11,12 ஆகிய தேதிகளில் ஊழியரின் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்த பின் அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படும் என்றும் தீர்ப்பளித்தார். இந்த நடைமுறையின் அறிக்கை வரும் நவம்பர் 25 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று தொழிலாளர் ஆணையருக்கு நீதிபதி உத்தரவு இட்டார். சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை தற்போது ஒத்தி வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here