எதிரணியை திணற வைத்த பிரபல அணி…, ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர்!!

0
எதிரணியை திணற வைத்த பிரபல அணி..., ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர்!!
எதிரணியை திணற வைத்த பிரபல அணி..., ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர்!!

ஜெர்மனியில் நடைபெற்று வரும் லீக் தொடரில், வெர்டர் அணிக்கு எதிராக பேயர்ன் முனிச் வீரர் ஒருவர், ஹாட்ரிக் கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஹாட்ரிக் கோல்:

கத்தாரில் வரும் 20 ம் தேதி நடைபெற இருக்கும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில், பல்வேறு அணிகள் வெவ்வேறு லீக்குகளில் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இந்த வகையில், ஜெர்மனில் நடைபெற்று வரும் பன்டெஸ்லிகா தொடரில், 18 அணிகள் கலந்து தங்கள் அணிகளை மேம்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இந்த தொடரில், இன்று பேயர்ன் முனிச் அணியானது வெர்டர் ப்ரெமென் அணியை எதிர்த்து போட்டியிட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், பேயர்ன் முனிச் சார்பாக ஜமால் முசியாலா 6 வது நிமித்தத்திலேயே ஒரு கோல் அடிக்க, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வெர்டர் அணியின் அந்தோணி ஜங் 10 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இதன் பிறகு பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில், பேயர்ன் முனிச் அணி வீரர்கள் 22, 26 மற்றும் 28 ஆகிய நிமிடங்களில் தொடர்ச்சியாக கோல் அடிக்க, ஆட்டத்தின் முதல் பாதியில் பேயர்ன் முனிச் 4-1 என முன்னிலையில் இருந்தது.

T20 IND vs ENG: சூர்யகுமாரை வீழ்த்த திட்டம் போட்ட இங்கிலாந்து கேப்டன்…, லீக்கான மாஸ்டர் பிளான்?

இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியிலும் பேயர்ன் முனிச் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி 2 கோல்கள் அடித்தனர். இதனால், பேயர்ன் முனிச் அணியானது 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 31 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. இந்த போட்டியில், செர்ஜ் க்னாப்ரி மூன்று கோல்களை அடித்து ஹாட்ரிக் படைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here