ஒரே பந்துக்கு பல கோடியா – என்னடா ஹர்திக் பாண்டியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு! பயன்படுத்துவாரா?

0
ஒரே பந்துக்கு பலகோடியா - என்னடா ஹர்திக் பாண்டியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு! பயன்படுத்துவாரா?
ஒரே பந்துக்கு பலகோடியா - என்னடா ஹர்திக் பாண்டியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு! பயன்படுத்துவாரா?

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சிறப்பாக விளையாடியதன் மூலம் பல்வேறு விளம்பர நிறுவனங்கள் இவரை பல கோடி கொடுத்து வாங்க ரெடியாக உள்ளனர்.

ஒரு நாளுக்கே இத்தனை கோடியாம்!

இந்திய அணியில் தற்போது நட்சத்திர ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்ந்து வருகிறார். இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்து பட்டத்தை வென்றுள்ளார். மேலும் இவர் தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கியது. அப்போதும் இளம் வீரர்களை கொண்ட அணியை வழிநடத்திய பாண்டியா தொடரை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியை தனதாக்கி கொண்டனர். மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கு ஹர்திக் பாண்டியா மிக முக்கிய பங்காக இருந்தார். அதாவது போட்டியில் 17 பந்துகளை சந்தித்து ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 33 ரன்கள் குவித்துள்ளார். மேலும் இவர் அடித்த ஒரு சிக்சர் மூலம் ஹர்திக் பாண்டியாவின் விளம்பரம் மார்க்கெட்டும் கலை கட்டியுள்ளது. அதாவது விளம்பர படப்பிடிப்புக்கு ஒரு நாளைக்கு இரண்டு கோடி ரூபாய் வரை ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஒரு விளம்பர நிறுவனம் இவரை 4 கோடி வரை ஏலத்தில் எடுத்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் பல நிறுவனங்கள் சமூக வலைதளங்கள் மூலம் விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவின் சமூக வலைதள பக்கத்தில் ஒரு விளம்பரத்திற்கான பதிவை போடுவதற்கு குறைந்தது 40 லட்சம் சம்பளம் கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாண்டியாவின் மதிப்பு புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது என்றே சொல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here