தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கும் ஹர்பஜன் சிங்.., இந்திய அணி மேல் ஏன் இவ்வளவு கோபம்?

0
தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கும் ஹர்பஜன் சிங்.., இந்திய அணி மேல் ஏன் இவ்வளவு கோபம்?
தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கும் ஹர்பஜன் சிங்.., இந்திய அணி மேல் ஏன் இவ்வளவு கோபம்?

ஆசிய கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறுவதற்கு BCCI சிறந்த வீரர்களை தேர்வு செய்யவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

இந்திய அணி செய்த தவறு!!

ஆசிய கோப்பை தொடரின் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனால் இந்திய அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த போதிலும் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் இறுதி போட்டிக்குள் நுழைந்திருக்கும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த ஆட்டத்தில் அணியின் கேப்டனான ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி அதிக ரன்கள் குவித்தார். ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். இதனால் இந்திய அணி தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்திய அணியின் தோல்வி குறித்து சில முக்கிய கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதாவது ரிஷப் பந்தை ஏன் அணியில் எடுக்க வேண்டும், அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் விளையாட வைத்திருந்தால் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும். பேட்டிங்கில் இந்திய அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. டாப் ஆர்டர் நன்றாக ஆடினால் மிடில் ஆர்டர் சரியாக ஆடுவதில்லை. மிடில் ஆர்டர் நன்றாக ஆடினால் டாப் ஆர்டர் சரியாக ஆடுவதில்லை என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதனால் இதுபோன்ற தவறுகளை டி20 உலக கோப்பையிலாவது இந்த தவறை சரி செய்து திறமையான வீரர்களை அணியில் எடுக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here