குக் வித் கோமாளி சீசன் 4.., கலந்துகொள்ள இருக்கும் டாப் சீரியல் பிரபலங்கள்.., வட்டாரத்தில் கசிந்த தகவல்!!

0
குக் வித் கோமாளி சீசன் 4.., கலந்துகொள்ள இருக்கும் டாப் சீரியல் பிரபலங்கள்.., வட்டாரத்தில் கசிந்த தகவல்!!
குக் வித் கோமாளி சீசன் 4.., கலந்துகொள்ள இருக்கும் டாப் சீரியல் பிரபலங்கள்.., வட்டாரத்தில் கசிந்த தகவல்!!

குக் வித் கோமாளி விஜய் டிவியின் பெரிய பக்கபலம் என்றே சொல்லலாம். சீசன் தொடங்கிய நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு காரணமே சமையல் நிகழ்ச்சிகளுடன் கூடிய காமெடி தான். புகழ், பாலா, மணிமேகலை, சிவாங்கி ஆகியோர் இந்த நிகழ்ச்சி மூலம் தான் பிரபலமடைந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது மூன்று சீசன்கள் வரை வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனாலும் மூன்றாவது சீசன் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். முதல் இரண்டு சீசன்களை இப்பொழுது வரை யாராலும் அடித்துக் கொள்ளவே முடியாது.

சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த சீசன் நிறைவு பெற்றிருந்த நிலையில் இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய டாக் அதிகமாக போய்க்கொண்டுள்ளது. எப்படியும் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 5ஆம் தேதிக்குள் ஒளிபரப்பாகி விடும்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த 2 மாதத்திற்குள் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிகழ்ச்சிக்கான வேலைப்பாடுகளும் ஆரம்பித்து விடும். இந்நிலையில் இந்த சீசன் 4 இல் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலமான தனம், பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் சௌந்தர்யா போன்றவர்களை கலந்துகொள்ள வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here