பிரபல நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,, விரைவில் சம்பள உயர்வு! தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி!!

0
பிரபல நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,, விரைவில் சம்பள உயர்வு! தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி!!

தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற உலகளாவிய மென்பொருள் நிறுவனமான பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட் , 4 ஆண்டுகளில் இரட்டிப்பு வருவாயை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது

பெர்சிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ்:

அண்மைக்காலமாக ஐடி நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் தொடர்ந்து வெளியேறி வருவது அதிகரித்துள்ளது. இதை தடுப்பதற்காக நிறுவனங்கள் சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. இதன் மூலமாக தங்களின் ஊழியர்களை தொடர்ந்து தக்க வைத்து கொள்கிறது. இந்நிலையில் புனேவை தளமாகக் கொண்ட பெர்சிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ், 4 ஆண்டுகளில் வருவாயை இரட்டிப்பாக்கி 2 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு வைத்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் மூலம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதாவது இந்த நிறுவனம் மென்பொருள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற உலகளாவிய நிறுவனமாகும். இது வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI), உடல்நலம், ஆயுள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் & வளர்ந்து வரும் பிரிவுகளின் மூலம் செயல்படுகிறது.

தீபாவளிக்கு தியேட்டர் போக “ஆப்பு”.., எக்குதப்பா எகிறிய டிக்கெட்டின் விலை? சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!!

இந்நிலையில் பெர்சிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சந்தீப் கல்ரா கூறியது, நாங்கள் 4 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் வருவாய் நிறுவனமாக மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளோம், மேலும் செப்டம்பர் காலாண்டில் நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வை வழங்கியது மற்றும் நிகர அடிப்படையில் 838 ஊழியர்களை பணி அமர்த்தி உள்ளது.

இதையடுத்து நடப்பு நிதியாண்டில் செப்டம்பருடன் முடிவடைந்த, 2வது காலாண்டு நிகர லாபம் 36% உயர்ந்து 220 கோடியாக உள்ளது. அதே நேரத்தில் ரூபாய் அடிப்படையில் அதன் வருவாய் 51.6% உயர்ந்து ரூ. 2,048 கோடியாக உள்ளது எனவும் தெரிவித்தார். இதையடுத்து நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு முந்தைய ஆண்டை விட தற்போது உயர்ந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here