தீபாவளிக்கு தியேட்டர் போக “ஆப்பு”.., எக்குதப்பா எகிறிய டிக்கெட்டின் விலை? சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!!

0
தீபாவளிக்கு தியேட்டர் போக "ஆப்பு".., எக்குதப்பா எகிறிய டிக்கெட்டின் விலை? சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!!

திரையரங்கு டிக்கெட் விலையை அதிகரிக்க கோரி தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம் முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிக்கெட் விலை அதிகரிப்பு:

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் பிடியில் மக்கள் தவித்து வந்ததால், எந்த திரைப்படமும் திரையரங்கில் வெளியிடவில்லை. அதனால் சில தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்தின் மூலம் படங்களை வெளியிட தொடங்கின. இருப்பினும் திரையரங்கில் பார்க்கும் அனுபவம் யாருக்கும் கிடைக்கவில்லை. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கடந்து மீண்டும் திரையரங்குகள் எப்போதும் வழக்கம் போல் செயல்படுகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் ஓடிடி தளத்தின் மூலம் படங்களை வெளியிட கூடாது என்று தியேட்டர் உரிமையாளர் சங்கம் போராட்டங்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எல்லா திரைப்படம் தியேட்டருக்கு வந்த பிறகு தான் ஓடிடியில் வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம் முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது Multiplex திரையரங்கு போல் தனி தியேட்டர்களின் டிக்கெட் விலையை 190 ஆக உயர்த்துவது குறித்த 5 வகையான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது

TET தேர்வர்கள் போராட்டம் – கல்வி அலுவலகத்தின் முன் காலவரையற்ற உண்ணாவிரதம்! அரசுக்கு நெருக்கடி!!

மேலும் வருகிற தீபாவளிக்கு பிரின்ஸ், சர்தார் போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. இந்த சமயத்தில் டிக்கெட் விலையை அதிகப்படுத்த சொல்லி சங்கம் கோரிக்கை விடுத்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக நாளை முதல் 27ம் தேதி வரை கிட்டத்தட்ட 7 நாட்கள் சிறப்பு காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here