இந்தியாவில் இளைஞர்களை தாக்கும் மற்றுமொரு கொடிய நோய் – அச்சத்தில் மக்கள்!!

0

இந்தியாவில் கொரோனாவில் இரண்டாவது அலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 4,12,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் ஹேப்பி ஹைபோக்சியா என்ற புதிய நோய் தொற்று பரவி வருவது கண்டுபிடிக்க பட்டுள்ளது.

ஹேப்பி ஹைபோக்சியா

கொரோனா முதலாம் அலையின் போது காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டு வந்தன. அதனை ஹைட்ராக்சி குளோரோ குயினோன் போன்ற மருந்துகள் கொண்டு குணப்படுத்தினர். ஆனால் இரண்டாவது அலையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் நோய் தாக்க ஆரம்பித்தது. இவ்வித நோயின் தாக்கம் இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலே முதலில் காணப்பட்டு வந்தது. தற்போது இவ்வித காய்ச்சல் இந்தியாவிலும் கோனோராவின் இரண்டாவது அலையாக மாறி வீசத்தொடங்கியது.

இம்முறை, நோய் தொற்று உள்ளவருக்கு எந்த வித அறிகுறிகளும் காணப்படுவதில்லை, மாறாக நோய் தொற்றின் ஆரம்பத்தில் நன்றாகவே உணருவர். பின் நோய் தொற்று உள்ளவருக்கு ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு படி படியாக குறைய தொடங்கும். ஆரோக்கியம் உள்ளோரின் ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு 95% இருக்கும் ஆனால் நோய் தாக்கியவுடன் ரத்தத்தில் ஆக்ஸிஜன் மெதுவாக குறைய தொடங்கும்.

3D Rendering,COVID-19 virus infection of human lungs

இதன் அறிகுறி ஆரம்பத்தில் தெரியாது. ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 40% கீழ் குறைந்த பின்பே தெரிய தொடங்கும். அதனால் நுரையீரல்களுக்கு கடுமையான பாதிப்பு உண்டாகும். பின் வியாதியின் வளர்ச்சி தீவிரம் அடையும். அதன் பின்னரே நோயின் தாக்கம் வெளியே தெரியும். இதை ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க செய்வர். இந்த நோயின் பெயர் ஹேப்பி ஹைபோக்சியா ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here