பொடுகு தொல்லை இனி உங்களுக்கு இல்லை – இதோ ஈஸியான டிப்ஸ்!!

0

இன்று இளைய தலைமுறைக்கு இருக்கும் பெரிய கவலைகளில் முக்கியமான கவலை பொடுகு. இந்த தொல்லை காரணமாக பலரும் வருத்தம் அடைந்து வருகின்றனர். இந்த பிரச்சனையில் இருந்து எளிமையாக மீண்டு வர பல இயற்கை வழிமுறைகள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..!!

தலைமுடி பிரச்சனை

ஒருவர் தன்னை அழகாக உணவர்வது தங்களது தலைமுடியினை வைத்து தான். ஆனால், அதனை முறையாக பராமரிக்க இன்று நமக்கு கவனம் மற்றும் நேரம் இல்லை என்றே கூறலாம். இதன் காரணமாக தலைமுடி உதிர்தல், பேன் தொல்லை மற்றும் பொடுகு தொல்லை வந்து விடுகிறது. தலைமுடியில் உள்ள அழுக்கு தான் பொடுகாக மாறி நம்மை நான்கு பேர் இருக்கும் மத்தியில் கூச வைத்து விடுகின்றது.

தமிழ்நாட்டு பொண்ணுங்களோட மாமியாரா?? வைரலாகும் அஸ்வின் அம்மாவின் புகைப்படம்!!

dandraff problem
dandraff problem

இதனை அடுத்து இதில் இருந்து மீண்டு வர பல இயற்கையான வழிமுறைகள் உள்ளன. இயற்கை வழிமுறைகளை பின்பற்றும் போது நாம் அதனை தொடர்ச்சியாகவும் முறையாகவும் பின்பற்ற வேண்டும். அப்படி தொடர்ச்சியாக செய்து வந்தால் நமது தலைமுடி பிரச்சனை தீர்ந்து விடும்.

எளிமையான வழிமுறைகள்

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துதல்,

இன்றைய காலகட்டத்தில் பலரும் பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் காரணத்தால் தலையில் எண்ணெய் என்ற ஒன்றை வைப்பதே இல்லை. அது தான் தவறான விஷயம் என்று கூட சொல்லலாம். தினமும் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே தலையில் உள்ள ஈரத்தன்மையினை பாதுகாக்கும். இதனால் பொடுகு தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

வீட்டில் செய்ய கூடிய பேக்,

சிறிதளவு வேப்பஇலை, எலுமிச்சை சாறு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை நன்றாக அரைத்து கொள்ளவும். அதனை தொடர்ந்து தலைக்கு குளிப்பதற்கு முன்பு தலையில் அப்ளை செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளித்து விடவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here