முடி உதிர்வை மூன்றே நாட்களில் தடுக்க வேண்டுமா?? வீட்டு வைத்திய முறை!!

0
hair growth
hair growth

இன்றைய காலத்தில் முடி உதிர்வு பிரச்சனையை நம்மில் பலரும் சந்திக்கின்றனர். பெரும்பாலும் பெண்கள், தங்களுக்கு அடர்தியான கூந்தல் இருக்க வேண்டும் என்றே எண்ணுவர். சிலர் தன் கூந்தலுக்கென்றே பிரத்யேகமாக அதிக நேரம் ஒதுக்குவார்கள் . பலர் வேலைக்கு செல்வதால் கூந்தலின் மீது அதிக கவனம் செலுத்துவது இல்லை. மாசுபாடு காரணமாகவும், சிலர்க்கு முடி உதிர்வு பிரச்னை ஏற்படுகிறது. எந்த பக்கவிளைவும் இல்லாமல் இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முடி உதிர்வை தடுப்பது பற்றி இதில் பார்க்கலாம்…

வெங்காய சாறு :

வெங்காயத்தை தலையில் தேய்ப்பதால் முடி உதிர்வை கட்டுக்குள் கொண்டு வரலாம். வாரம் ஒருமுறை சின்ன வெங்காயத்தை அரைத்து , சாறெடுத்து, அதில் இரண்டு வைட்டமின் இ கேப்சூலை கலந்து நன்றாக தலையில் மஜாஜ் செய்து 20 நிமிடங்களுக்கு பிறகு சிகைக்காயால் தலையை அலசுங்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால தலையில் உள்ள பொடுகு போவதோடு, முடி உதிர்வதையும் கட்டுப்படுத்தும். மேலும், இந்த முறையை குளிர் காலங்களில் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், சிலருக்கு சைனஸ் பிரச்னை வர வாய்ப்புள்ளது.

வெந்தயம் :

வெந்தயம் நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியில் அவசியம் இருக்கும் ஒரு பொருள். தலை முடி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது வெந்தயம் தான். வெந்தயத்தை இயல்பாகவே நாம் அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் அதிகளவில் பயனடையலாம்.

வாரம் ஒருமுறையேனும், வெந்தயத்தை உறவைத்து, அரைத்து தலையில் தடவி ஒரு 30 நிமிடங்களுக்கு பிறகு தலை அலசுங்கள். இதனால் கூந்தல் பொலுவடையும் . மேலும், இது முடியின் இயற்கையான நிறத்தை பாதுகாக்கும். வெந்தயம் குளிர்ச்சி என்பதால் காலநிலைக்கேற்ப உபயன்படுத்துவது நல்லது.

கற்றாழை :

கற்றைலையை தேடி நாம் அலைய வேண்டிய அவசியமே இல்லை. நம் வீட்டின் வாசலிலே இருக்கும். கற்றாழையில் அதிக அளவு தாதுப்பொருட்கள், விட்டமின்கள் உள்ளது. கற்றாழையை தலையில் தேய்ப்பதால் கூந்தல் மிருதுவாகவும், போசாக்கு நிறைந்ததாகவும் இருக்கும். கற்றாழையை சாறெடுத்து அந்த சாற்றை தலையில் தடவுங்கள். இது உடல் உஷ்ணத்தை குறைப்பதோடு, தலை முடி வளர்ச்சியையும் மேம்படுத்தும்.

மசாஜ் முறை :

வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் தலைக்கு மஜாஜ் செய்வது அவசியம். இதனால் மன அழுத்தம் குறைவதோடு, தலைமுடியும் வலுவடையும். சுத்தமான தேங்காய் எண்ணெய் கொண்டு 15 நிமிடங்களுக்கு நன்றாக தலையை மஜாஜ் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம், முடி அடர்த்தியாக வளர்வதோடு, தலை முடி மிருதுவாகவும் காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here