திடீரென பாதியில் நிறுத்தப்பட்ட நடிகர் சந்தானத்தின் திரைப்படம் – ரசிகர்களால் நடந்த விபரீதம்!

0
திடீரென பாதியில் நிறுத்தப்பட்ட நடிகர் சந்தானத்தின் திரைப்படம் - ரசிகர்களால் நடந்த விபரீதம்!

நடிகர் சந்தானத்தின் புதிய திரைப்படமான குளு குளு இன்று ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் இப்படம் பாதியில் நிறுத்தப்பட்ட பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சந்தானத்தின் ‘குளு குளு’:

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து தற்போது கதாநாயகனாக உருவெடுத்து பல படங்களில் நடித்து வருபவர் தான் சந்தானம். இவர் முதன் முதலில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியலாம் அவர் பெயர் பரவியது. மேலும் நடிகர் சிம்பு தான் இயக்கிய வல்லவன் மற்றும் சிலம்பாட்டம் படங்களில் மூலம் வெள்ளி திரையில் நகைச்சுவை நடிகராக சந்தானத்தை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம்  கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். இவரின் ‘குளு குளு’ படம் ரிலீஸ் ஆகி இன்று முதல் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் உள்ள தியேட்டரில் படத்தை பாதியில் நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்பீம் படத்திற்காக சூர்யாவுக்கு கிடைத்த கெளரவம் – சர்வதேச அளவில் முக்கிய அங்கீகாரம்!!

அதாவது  சென்னையில் உள்ள பாப்புலர் ஆன ரோகிணி தியேட்டரில் சந்தானத்தின் ‘குளு குளு’ படம் ரிலீஸ் ஆகியுள்ளது. தியேட்டரில் டிக்கெட் எடுக்காமல் ரசிகர்கள் உள்ளே சென்றுள்ளனர். இதனால் டிக்கெட் எடுத்த ரசிகர்கள் இடம் இல்லாமல் தத்தளித்து சண்டையிட்டு உள்ளனர். இதனால் படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு போலீஸ்காரர்கள் உதவியுடன் டிக்கெட் வாங்காத நபர்களை வெளியேற்றி அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து படத்தை திரையிட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here