நிகழ்ச்சி மேடையில் மயங்கி சரிந்து உயிரிழந்த பிரபல நடிகர் – உச்சக்கட்ட அதிர்ச்சியில் திரையுலகம்!

0
அகால மரணமடைந்த பிரபல இளம் நடிகர் - திடீர் இறப்பால் உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல மராத்தி நடிகரான அரவிந்த் தானு அண்மையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிர் இழந்துள்ளார்.

அரவிந்த் தானு:

மராத்தியில் பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் அரவிந்த் தானு. அதன் பின்னர் சில மராத்தி படத்திலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இவர் நடித்த ‘சுக் ம்ஹஞ்சே நக்கி கே அஸ்டா’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இதன் மூலம் பல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவும் மற்றும் சில மராத்தி படங்களில் முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த திங்கட்கிழமை மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அரவிந்த் தானு. அந்த நேரத்தில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். அதன் பின்னர் மயங்கிய நிலையில் இருந்த அரவிந்த் தானுவை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மருத்துவர்கள் அதிகமாக போராடியும் காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதனால் மராத்தி திரையுலகம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here