அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 4% இல்லை 8%…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 4% இல்லை 8%..., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 4% இல்லை 8%..., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ், அகவிலைப்படியை (DA) ஆண்டுக்கு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் அரசு உயர்த்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு மார்ச் மாதத்தில் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான், அசாம், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும் சமீபத்தில் அடுத்தடுத்து அறிவித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வகையில், தற்போது குஜராத் மாநில அரசானது அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ், 8% அகவிலைப்படியை உயர்த்துவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கடந்த 2022 ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் 4% உயர்வு அளிக்கப்படும் என அறிவித்த நிலையில், 2023 ஜனவரி 1ம் தேதி முதல் இந்த 4% அதிகரிப்பை அமல்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மகளிருக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் இலவசம் பேருந்து பயணம்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மேலும், மத்திய அரசு நிபந்தனைகளின் படி, நிலுவை தொகையையும் 3 தவணையாக வழங்க திட்டமிட்டுள்ளது. அதாவது, வரும் ஜூன் மாதத்தில் முதல் தவணையும், அடுத்த 2 தவணைகளை அக்டோபர் மாதத்தில் சம்பளத்துடன் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு கூடுதல் ரூ.4,516 கோடி செலவானாலும் 9.38 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள் பயன் பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here