தமிழகத்தில் மகளிருக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் இலவசம் பேருந்து பயணம்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
தமிழகத்தில் மகளிருக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் இலவசம் பேருந்து பயணம்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தில் மகளிருக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் இலவசம் பேருந்து பயணம்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழக அரசானது, பொதுமக்களின் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் தான், தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் மகளிருக்கு இலவச பேருந்து சேவையை அமல்படுத்தியது. இந்த சேவையானது, சிறப்பாக செயல்பட்டு வருவதை அடுத்து தற்போது புதிய அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, சமீபத்தில் நடந்த தமிழக சட்டப் பேரவையில் 5 வயது வரையிலான குழந்தைகள் இலவச பேருந்து பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பை, தமிழக அரசானது தற்போது ஏற்று அதனை அமல்படுத்தி அரசாணையை வெளியிட்டுள்ளது.

மீண்டும் அச்சுறுத்த தொடங்கும் கொரோனா வைரஸ்..,உலக அளவில் 68.90 கோடி பேர் பாதிப்பு!!

இதன்படி, 5 வயது வரையிலான குழந்தைகள் இனி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். மேலும், 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை டிக்கெட் வசூலிக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 3 வயது குழந்தைகளுக்கு மட்டுமே அரசு பேருந்துகளில் இலவச பயணம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here