ஹைதராபாத்திற்கு எதிராக மாஸ் காட்டிய சுப்மன் கில், ஷமி…, பிளே ஆப்புக்கு முன்னேறிய குஜராத்!!

0
ஹைதராபாத்திற்கு எதிராக மாஸ் காட்டிய சுப்மன் கில், ஷமி..., பிளே ஆப்புக்கு முன்னேறிய குஜராத்!!
ஹைதராபாத்திற்கு எதிராக மாஸ் காட்டிய சுப்மன் கில், ஷமி..., பிளே ஆப்புக்கு முன்னேறிய குஜராத்!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் இந்தியாவில் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், பிளே ஆப்க்கு முன்னேறும் முனைப்பில் அனைத்து அணிகளும், மற்ற அணிகளுக்கு எதிராக கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர். இந்த வகையில், நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் (GT), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்த்து தனது 13 வது லீக் போட்டியில் மோதியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், டாஸ் வென்ற SRH அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய குஜராத் அணியில், விருத்திமான் சாஹா டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றம் தந்தார். ஆனால், சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்து அசத்தினார். இவர்களில் சாய் சுதர்சன் 47 ரன்களில் வெளியேற, பின் வரிசையில் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால், சுப்கில் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதனால், குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை குவித்திருந்தது. இதில், சுப்மன் கில் 58 பந்தில் 13 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 101 ரன்கள் அடித்து, ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மேலும், ஐபிஎல் அரங்கில் குஜராத் அணிக்காக, முதல் சதத்தை அடித்த வீரர் என்ற பெருமையை அடைந்ததுடன், 1000 ரன்களை கடந்த முதல் குஜராத் வீரர் என்ற சாதனையையும் அடைந்தார். இதுவரை 29 போட்டியில், ஒரு சதம் 8 அரைசதம் உட்பட 1059 ரன்கள் அடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை நட்சத்திரம் யாருனு தெரியுதா? புகைப்படம் உள்ளே!!

இந்த போட்டியில், 189 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் தோல்வியடைந்தது. இதில், முகமது ஷமி மற்றும் மோஹித் சர்மா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றதன் மூலம், 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here