MI vs LSG: பிளே ஆப்புக்கான யுத்தத்தில் மும்பை மற்றும் லக்னோ…, வெற்றி வாகை சூட போவது யார்??

0
MI vs LSG: பிளே ஆப்புக்கான யுத்தத்தில் மும்பை மற்றும் லக்னோ..., வெற்றி வாகை சூட போவது யார்??
MI vs LSG: பிளே ஆப்புக்கான யுத்தத்தில் மும்பை மற்றும் லக்னோ..., வெற்றி வாகை சூட போவது யார்??

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், இன்று மும்பை இந்தியன்ஸ் (MI) அணியானது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை எதிர்த்து ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் மோத உள்ளது. இந்த இரு அணிகளும், நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி முடிந்துள்ளன. இதன் வெற்றி தோல்வி அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 13 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும் உள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, பிளே ஆப்புக்கு முன்னேறுவதற்க்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும். ஆனால், தோல்வி அடையும் அணிக்கு இந்த வாய்ப்பு பெரும் கேள்வி குறியாகிவிடும். இதனால், இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியானது முதல் சில போட்டிகளில் தோல்வியை சந்தித்து வந்தாலும், அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில், இரு அணிகளிலும் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன் குறித்து பின்வருமாறு காணலாம்.

ஹைதராபாத்திற்கு எதிராக மாஸ் காட்டிய சுப்மன் கில், ஷமி…, பிளே ஆப்புக்கு முன்னேறிய குஜராத்!!

MI அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்;

ரோஹித் சர்மா(சி) , எஸ்.ஏ யாதவ் , டிம் டேவிட் , விஷ்ணு வினோத் , சி கிரீன் , பியூஷ் சாவ்லா , என் வதேரா , இஷான் கிஷன், கே கார்த்திகேயா, ஜேபி பெஹ்ரண்டோர்ஃப், சி ஜே ஜோர்டான்.

LSG அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

எம்பி ஸ்டோனிஸ் , ஒய் எஸ் தாக்கூர், கைல் மேயர்ஸ் , கே எச் பாண்டியா(சி) , பி என் மங்காட் , அவேஷ் கான் , நிக்கோலஸ் பூரன் , கியூ டி காக், ரவி பிஷ்னோய், ஏ மிஸ்ரா, யுத்வீர் சிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here