அரசு அதிகாரிகளுக்கான வாகனங்கள் கொள்முதல் செலவுகள் திருத்தம்., இவ்ளோ லட்சம் தான் லிமிட்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பீகார்!!!

0
முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பீகார்

பொதுவாக அமைச்சர்கள், மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள், மாவட்ட மற்றும் மாநில நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, வாகனங்கள் வாங்குவதற்கான செலவு வரம்பை ரூ,14 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை ஐந்து அடுக்குகளாக திருத்தி உள்ளதாக அம்மாநில நிதித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி,

  • அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையிலும்,
  • கூடுதல் தலைமைச் செயலர், முதன்மைச் செயலர், செயலர் பதவிகளில் இருப்பவர்கள் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் உள்ளவர்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும்,
  • மாவட்ட மாஜிஸ்திரேட், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகளுக்கான பதவிகளில் உள்ளவர்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும்,
  • காவல் கண்காணிப்பாளர்களுக்கு ரூ.16 லட்சம் வரையிலும்,
  • மற்ற அதிகாரிகளுக்கு ரூ.14 லட்சம் வரையிலும் அரசு வாகனங்கள் வாங்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

மீண்டும் சீனாவில் பரவும் வைரஸ் தொற்று…, அதிரடியாக பயண தடை விதித்த அமெரிக்கா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here