மீண்டும் சீனாவில் பரவும் வைரஸ் தொற்று…, அதிரடியாக பயண தடை விதித்த அமெரிக்கா??

0
மீண்டும் சீனாவில் பரவும் வைரஸ் தொற்று
கடந்த 2020 ஆம் ஆண்டில் உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தி வந்தது. சீனாவில் இருந்து பரவிய இந்த தொற்றால் மில்லியன் பில்லியன் கணக்கில் மக்கள் இறந்தனர். இதனால், தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு மக்கள் வருவதை சில நாட்களுக்கு தடை செய்ததை நாம் அறிவோம்.
இந்நிலையில், சீனாவில் மீண்டும் ஒரு நோய் வேகமெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அதிக அளவில் குழந்தைகளை தாக்கும் பூஞ்சை அல்லது பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றின் காரணமாக நுரையீரலில் ஏற்படும் நிமோனியா தொற்று சீனாவில் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள எதிர்க்கட்சியினர், “சீன நாட்டவர் அமெரிக்கா வர பயண தடை விதிக்க வேண்டும்” என்று அமெரிக்க அதிபர் பைடனுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இதனை உலக சுகாதார நிறுவனம் விசாரித்த போது, சீனாவில் நிமோனியா தொற்று கட்டுக்குள் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here