உள்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசுப்பணி ஒதுக்கீடு – மாநில அரசு அதிரடி முடிவு!!

0

மத்திய பிரதேசத்தில் அரசு வேலைகள் உள் மாநில குடிமக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார். இதனால் மூலம் வேலையில்லாத் திண்டாட்டம் குறையும் என கூறப்படுகிறது.

அரசுப்பணி ஒதுக்கீடு:

மத்தியப் பிரதேச குடிமக்களுக்கு அரசு வேலைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான சட்ட மாற்றங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். அரசு வேலைகளுக்கு உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று சிவ்ராஜ் சிங் சவுகான் கூறிய மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

போபாலில் நடந்த மாநில அளவிலான சுதந்திர தின விழாவில் உரையாற்றிய சிவ்ராஜ் சிங் சவுகான், ஒவ்வொரு திட்டத்திற்கும் மாநில மக்கள் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை என்பதற்காக தனது அரசாங்கம் ஒரு குடியுரிமை தரவுத்தளத்தை தயாரித்து வருவதாக தெரிவித்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Shivraj Singh
Shivraj Singh Chauhan

மத்திய பிரதேசத்தில் உள்ள உள்ளூர் இளைஞர்களுக்கு மாநிலத்தில் அரசு வேலைகளுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்று உறுதியளித்த பின்னர், சிவராஜ் சிங் சவுகான் அனைத்து அரசு வேலைகளும் மாநில குடிமக்களுக்கு ஒதுக்கப்படும் என்று இன்று அறிவித்து உள்ளார்.

ரயில்வே பணியில் தமிழர்கள் புறக்கணிப்பு..? ரயில்வே துறை விளக்கம்..!

“மத்தியப் பிரதேச இளைஞர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும். வேலை வாய்ப்புகள் பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் நமது மாநில இளைஞர்கள் குறித்து அக்கறை கொள்வது நமது கடமை” என்று கூறிய சிவராஜ் சிங் சவுகான், “பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ஒரு நெறிமுறையை நாங்கள் வைப்போம்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here