தமிழ்நாடு பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை இடம் பெறாதது ஏன்? கண்டனம் தெரிவித்து வேலை நிறுத்த போராட்டம்!!!

0
தமிழ்நாடு பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை இடம் பெறாதது ஏன்? கண்டனம் தெரிவித்து வேலை நிறுத்த போராட்டம்!!!
தமிழ்நாடு பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை இடம் பெறாதது ஏன்? கண்டனம் தெரிவித்து வேலை நிறுத்த போராட்டம்!!!

சமீப காலமாக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில பட்ஜெட்டில் அறிவித்து வந்தனர். இந்நிலையில் 2023-24 ம் நிதியாண்டுக்கான தமிழ்நாட்டின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று சமர்ப்பித்து இருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் அறிவித்து இருந்தார். ஆனால் “அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்டத்தை தெரிவிக்கவில்லை” என அரசுப் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ரேஷன் கடை, டாஸ்மாக், அங்கன்வாடி, சத்துணவு, துப்புரவு தொழில் உள்ளிட்ட அரசு துறைகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

லவ் டுடே நாயகனுடன் கை கோர்த்த விக்னேஷ் சிவன்..,முக்கிய ரோலில் களமிறங்கும் நயன்தாரா!வெளியான சூப்பர் அபிடேட்!!

இதனால் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மார்ச் 28ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்ய உள்ளோம்.” என கூறியுள்ளார். இது தொடர்பான நடவடிக்கை குறித்த தகவலை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here