உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சிறந்து விளங்கிய வீரர்கள்…, டாப் 5 லிஸ்ட் இதோ!!

0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சிறந்து விளங்கிய வீரர்கள்..., டாப் 5 லிஸ்ட் இதோ!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சிறந்து விளங்கிய வீரர்கள்..., டாப் 5 லிஸ்ட் இதோ!!

2021-2023 ஆண்டுகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறந்து விளங்கிய டாப் 5 வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

ஐசிசி சார்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2வது சீசனுக்கான (2021- 2023) லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. இந்த இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஜூன் 7ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. 9 அணிகள் பங்கு பெற்ற இந்த தொடரில் சிறந்த பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கை கொண்ட டாப் 5 வீரர்களை குறித்து இப்பதிவில் காணலாம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த பட்டியலுக்கான பந்து வீச்சாளர்களில், நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் 2021 ல் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 193 ரன்களை விட்டுக்கொடுத்து, 10 கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் சஜித் கான் 42 ரன்களுக்கு 8 விக்கெட்டையும், ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் 64 ரன்களுக்கு 8 விக்கெட்டையும், நியூசிலாந்தின் மாட் ஹென்றி 23 ரன்களுக்கு 7 விக்கெட்டையும் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 32 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி டாப் 5 யில் இடம் பிடித்துள்ளனர்.

தமிழ்நாடு பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை இடம் பெறாதது ஏன்? கண்டனம் தெரிவித்து வேலை நிறுத்த போராட்டம்!!!

இதே போல, பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில், நியூசிலாந்தின் டாம் லாதம் பங்களாதேஷிற்கு எதிராக 34 பவுண்டரி 2 சிக்சர்கள் உட்பட 252 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 215, இலங்கையின் தினேஷ் சண்டிமால் 206*, தென் ஆப்பிரிக்காவின் மார்னஸ் லாபுசாக்னே 204 மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 200* என இரட்டை சதங்களை அடித்து இந்த சீசனில் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here