முழு முடக்கப் பகுதிகளில் அரசுப் பேருந்துகள் இயங்குமா? ஆட்சியர் விளக்கம்!

0

மதுரையில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் அரசுப் பேருந்துகள் இயங்குமா? என்கிற கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் வினய் பதில் அளித்துள்ளார்.

அரசுப் பேருந்துகள் இயக்கம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது மதுரை மாவட்டத்திலும் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Aarapalayam Bus stand
Aarapalayam Bus stand

உடுமலை சங்கர் கொலை வழக்கிலிருந்து கெளசல்யாவின் தந்தை ஏன் விடுவிக்கப்பட்டார் ??

அதவாது முழு முடக்கம் அமல்படுத்தப்பட உள்ள பகுதிகளில் அரசுப் பேருந்துகள் இயங்காது என தெரிவித்து உள்ளார். மேலும் அப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளும் பூட்டப்படும் என கூறியுள்ளார். மேலும் மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பெரியார், எம்ஜிஆர் மற்றும் ஆரப்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்கள் மூடப்படும் என ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.  மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகள், மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றியங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here