கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எப்படி ஊதியம் வழங்க முடியம் – உயர்நீதி மன்றம் கேள்வி..?

0
Teacher
Teacher

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் எவ்வாறு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும் என தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்..!

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட்டது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில், ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுவதால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி கல்வி நிறுவனங்கள் சார்பில் கூறப்பட்டன.

உயர் நீதி மன்றம் கேள்வி..!

ஆன்லைனில் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா என்றும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும் தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, தமிழக அரசு விரிவான விளக்கம் அள்ளிக்குமாறு விசாரணையை வருகிற 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here