மின் கட்டணத்தை ரத்து செய்யுங்கள் – கோரிக்கை வைக்கும் நிறுவனங்கள்..!

0

கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியா பல தடுப்பு முயற்சிகளை எடுத்து வருகின்றது. இதுவரை 206 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சிறு குறு தொழிலாளர்களின் நிலைமை:

கொரோனாவால் மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதில் சிறு தொழில் நிறுவனங்கள் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர்.அதை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்கெனவே வேலை பார்த்ததற்கான சம்பளம் கூடக் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அரசு தரப்பிலிருந்து சில சலுகைகள் வழங்கப்பட்டிருந்தாலும் அது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. கடன் வாங்கி தொழில் நடத்திய சிறு தொழில் நிறுவனங்கள் பல, கடனை அடைக்க முடியாமலும், செய்த தொழிலுக்கான கூலி கிடைக்காமலும் வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கின்றனர்.

குறு, சிறு தொழிலார் சங்க கோரிக்கை

கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தை பாதுகாத்திட தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது. இந்த நிலையில் தமிழக அரசின் உதவிகள் குறு, சிறு தொழில்நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வகையில் டேக்ட் சங்கத்தின் சாா்பில் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம்.அதன்படி, தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து தொழில்களைப் பாதுகாக்கும் வகையில் தாய்கோ வங்கி மூலம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு தொழில்நிறுவனங்களுக்கு அவசரகாலக் கடனாக ரூ .2 லட்சம் வரை வழங்க வேண்டும்.

இந்தத் தொகையை வட்டி இல்லாமலும் 6 மாத அவகாசம், 24 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உற்பத்தி இல்லாத நிலையில் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு மின்சார கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்து தொழில்கள் முழுமையாக நடைபெறுவதற்கு குறைந்தது 6 மாதங்களுக்கு மேலாகும் எந்பதால் தொழில் வரி, வீட்டு வரி, குடிநீா் கட்டணம், கம்பெனிகளுக்கான பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்ட கட்டணங்களை குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் தொழில் வளா்ச்சி பெறுவதுடன் இது தொழில்முனைவோா்களுக்கும், தொழிலாளா்களுக்கும் உதவியாக இருக்கும் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.

மின் கட்டணம் மூன்று மாதம் ரத்து வேண்டும்

உதிரிப்பாகங்களைத் தயாரித்துக் கொடுக்கும் சிறு நிறுவனங்களில் சிஎன்சி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மாதத்துக்கு ரூ.15,000 மின் கட்டணம் ஆகிறது. லேத் இயந்திரங்களை இயக்கும் சிறு நிறுவனங்கள் மாதத்துக்கு மின் கட்டணமாக ரூ.4,000 செலுத்துகின்றன. இதுபோன்ற சூழலில் தற்போது ஊரடங்கு உத்தரவால் ஆர்டர்கள் ரத்தாகி தொழில் முடங்கியுள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதார மந்தநிலையால் இந்நிறுவனங்களுக்கான ஆர்டர்கள் மிகக் குறைவாகவே இருந்தன.

இதுபோன்ற சூழலில் தமிழகத்தின் சிறு நிறுவனங்கள் துறையினருக்கான மின் கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சிறு நிறுவனங்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவரான ஜே.ஜேம்ஸ் பொதுச் செயலா் ஜி.பிரதாப் சேகா் ஆகியோா் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:அனுப்பி கோரிக்கை வைத்துள்ளார். சிறு நிறுவனங்கள் துறையினருக்கான வருமானம் முற்றிலும் முடங்கியுள்ள இச்சூழலில் அவர்களால் எவ்வாறு மின்கட்டணத்தைச் செலுத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அரசு இதில் நல்ல தீர்வை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here