Thursday, May 2, 2024

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவ படிப்புகளில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 158 பேர் தான் – அதிர்ச்சி தகவல்!!

Must Read

மருத்துவ சேர்க்கைக்கான நுழைவு தேர்வான நீட் தமிழகத்தில் அறிமுகமானதற்கு பிறகு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சேர்க்கை பெருமளவு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு அறிமுகமாவதற்கு முன் பல மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு:

தேசிய அளவில் பல லட்சம் மாணவர்கள் மருத்துவ சேர்க்கைக்காக எழுதப்படும் தேர்வுகள் தான் நீட். இந்த தேர்வுகள் தமிழகத்திற்கு 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு வரை மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு தான் சேர்கை நடைபெற்றது. இந்த நீட் தேர்வு மத்திய அரசால் 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு அரசியல் பிரமுகர்கள் முதல் கல்வியாளர்கள் வரை அனைவரும் தங்களது கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், மத்திய அரசு தேர்வுகளை நடத்துவதில் உறுதியாக இருந்தது. அதன்படி தான் தேர்வுகளும் நடைபெற்று சேர்க்கையும் நடந்து வருகின்றது. தமிழக அரசு மற்றும் இதர கட்சிகள் அனைத்தும் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

காரணம், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுகள் மிகவும் கடினமாக இருந்தது தான். அவர்களது நலன் கருதி தான் தமிழக அரசு இந்த தேர்வுகளை ரத்து செய்ய தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

பெருமளவு குறைந்துள்ளது:

இந்த நீட் தேர்வு குறித்த பயம் காரணமாக பல மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்படியாக இருக்க, நீட் தேர்வு அறிமுகம் ஆனதற்கு பின், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்ற விவரத்தை தருமாறு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மருத்துவ கல்வி நிர்வாக இயக்குநகரத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்கு மருத்துவ கல்வி நிர்வாக இயக்குனரகம் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை அளித்துள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடந்த 2015-2016 மற்றும் 2016-2017 கல்வி ஆண்டுகளில் மட்டும் அரசு பள்ளிகளில் படித்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஆனால், நீட் தேர்வு அறிமுகமான 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு பள்ளிகளில் படித்த 158 மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அரசு பள்ளிகள் படிக்கும் மாணவர்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு சிதைத்துள்ளது என்று தெரியவருவது கவலை அளிப்பதாக உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -